Thursday, February 3, 2011

பருப்பு உசிலி


பருப்பு உசிலி

தேவையானப்பொருட்கள்:

பீன்ஸ் - நறுக்கியது
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு



செய்முறை:

@.துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

@. தண்ணீரை வடித்த பருப்புடன்,மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.


@. அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும்.


@.ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.


(மிக்சியில் அல்லது food processor ஒரே ஒரு சுற்று சுற்றினால் நன்றாக உதிர்ந்து விடும்).


@. பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.


@.ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும். பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.



@.விரும்பினால் கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு கிளறி இறக்கி வைக்கவும்.



...............................................

6 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

சாருஸ்ரீராஜ் said...

பீன்ஸ் உசிலி சூப்பரா இருக்கு , ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்தது...சூப்பராக இருக்கின்றது...

asiya omar said...

அருமையாக இருக்கு.

komu said...

பீன்ஸ் உசிலி படங்களும் செய்முறை விளக்கங்களும் நன்றாக இருக்கு.

ஹர்ஷினி அம்மா said...

Thanks All :-)

ஆயிஷா said...

அருமையாக இருக்கு.

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்