Thursday, January 14, 2010

கோதுமை அப்பம்


கோதுமை அப்பம்

கோதுமை அப்பம் என் மாமி எண்ணெயில் சுட்டு எடுப்பாங்க.. ரொம்ப சுவையாக இருக்கும் அதையே எண்னெய் குறைவாக டயட் அப்பம் இது ...ஆனாலும் கொஞ்சம் அதே சுவையில்.


தேவையான பொருட்கள்:

கனிந்த வாழைப்பழம் - 2
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு - 1 கப்



செய்முறை:-

#.முதலில் வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்.



#.வெல்ல கரைசலில் வாளை பழத்தை மசித்து சேர்க்கவும்.



#.வெல்ல கலவையில் மாவு, ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.



#.இட்லி மாவின் பதத்திற்க்கு மாவை கலக்கி வைக்கவும்.



#.பனியாரக்கல்லில் கொஞ்சம் எண்ணெய் அல்லது ஆயில் ஸ்பிரே செய்தபின் மாவை ஊற்றி அளவான தனலில் வைத்து வேகவிடவும்



#பணியாரம் (அப்பம்)தயார்.


என் மாமி இதில் தேங்காய் சேர்த்து செய்ததில்லை நம்ம மேனகா குறிப்பை பார்த்து கொஞ்சம் தேங்காயும் கலந்து செய்ததில் மிகவும் சுவையாக இருந்தது.

நன்றி மேனகா







2 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

அண்ணாமலையான் said...

செஞ்சு சாப்புடலாம்னு நினக்கறேன்...

Mrs.Menagasathia said...

அப்பம் பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு. நன்றி ஹர்ஷினி அம்மா!!

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்