Friday, October 23, 2009

பிளாக் பாரஸ்ட் கேக்

இன்று என்னவருக்கு பிறந்தநாள்...சரி நம்மலே எதாவது கேக் பன்னலாம்ன்னு அவரை கேட்டால் அருக்கு பிளாக் பாரஸ்ட் கேக்தான் பிடிக்கும்னாரு...ம்ம்ம் சரி அவரோட தலையொழுத்து என்ன பன்னமுடியும் நானும் ஏதோ செய்தேன்...இதற்க்கு விஃப்கீரிம்மும்..எளிமையான பொருட்களையும் வைத்து செய்தேன்.

தேவையான பொருட்கள்:-

சாக்லெட் கேக்-1
(நான் ரெடி மிக்ஸ் உபயோகித்தேன்.)

சக்கரை-1 கப்
தண்ணீர் -2 கப்
டின் செஃரி
விஃபகீரிம்செய்முறை:-

*.முதலில் சாக்லெட் கேக் பேக் செய்து ஆறவிடவும்.
*.2கப் தாண்ணீர், 1 கப் சக்கரையையும் சேர்த்து சக்கரை கரைந்து கொதிக்கும் போது இறக்கினால் சுகர் சிரப் தயார். இதையும் கொஞ்சம் ஆறவிடவும்.*.கேக்கை 3 பாகங்கலாக வெட்டிக்கொள்ளவும்.

*.முதலில் ஒரு கேக் வைத்து அதன் மேல் சுகர் சிரப்பை ஒரு ஸ்பூனால் கேக் முலுவதும் இருக்குமாரு லேசாக ஊற்றவும்.*.அதற்க்கு மேல் கொஞ்சம் விஃப்கீரிம் பூசவும்.*.விப்கீரிம் மேல் செஃரியை கட் பன்னி போடவும்.


*.அதக்கு மேல் அடுத்த லேயர் கேக் வைத்து லேசாக அழுத்தவும்.


*.அதிலையும் சுகர் சிரப்,விப் கீரிம், செஃரி என அழங்கரிக்கவும்.*.அதற்க்கும் மேல் 3வது லேயர் கேக் வைத்து...சுகர் சிரப்,விப் கீரிம், செஃரி என விருப்பம் போல போடவும்.*.கேக் தயார்


*.கேக்கை 2 மணி நேரம் ஃபிரிஜில் வைச்சுட்டு கட் செய்யவும்...அப்பதான் சுகர் சிரப் எல்லாம் எல்லா ஊறி செட் ஆகும்..வாங்க சாப்பிடலாம்...........................................

19 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Mrs.Menagasathia said...

உங்கள் கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

கேக் ரொம்ப அழகாவும்,சூப்பராகவும் இருக்கு ஹர்ஷினி!!

Jaleela said...

ஹர்ஷினி அம்மா சூப்பரோ சூப்பர்

தீபாவளிக்கு பிறகு இப்ப தான் பதிவா?
வாழ்த்துக்கள்.
உங்கள் கணவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

அந்த அப்பாவிக்கு, நல்லவருக்கு, தியாகிக்கு, மனிதருள் மாணிக்கத்திற்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


மத்தபடி மன்னிச்சுக்கோங்க எனக்கு இந்த பிளாக் பாரஸ்ட் டேஸ்ட் ஏனோ பிடிக்கரதில்லே :((((((((

நாஸியா said...

அட இவ்வளவு எளிதா! சரி அப்படியே சாக்லேட் கேக் செய்முறையையும் சொல்லிட்டா நல்லா இருக்கும்!

ஹர்ஷினி அம்மா said...

நன்றி மேனகா :-)

ஹர்ஷினி அம்மா said...

ஆமாம் ஜலீலா அக்கா இப்ப எல்லாம் போஸ்ட் போட நேரமே இருக்கறது இல்லைக்கா ...அதான் கொஞ்சம் இடைவெளி. நன்றி அக்கா

ஹர்ஷினி அம்மா said...

வாங்க ராஜ் வாங்க

/அப்பாவிக்கு, நல்லவருக்கு, தியாகிக்கு, மனிதருள் மாணிக்கத்திற்கு /

ஏன் ஏன் இப்படி எல்லாம் இதை படிச்சுட்டு அவருக்கு சந்தோசம் தாங்களை....

எனக்கு கடையில் அவ்வளவா பிடிச்சது இல்லை அவருக்காக தான் சாப்பிட்டு இருக்கேன்..ஆனா நான் செய்தது நிஜமாவே ரொம்ப நல்லா இருந்தது. :-)

ஹர்ஷினி அம்மா said...

நன்றி நாஸியா...ரொம்ப ஈசிதான் சாக்லெட் கேக் ரெசிபி சீக்கிரம் தரேன்

ஹர்ஷினி அம்மா said...

என் கணவருக்கு உங்கள் அனைவரின் வாழ்த்தையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி... நன்றி நன்றி நன்றி

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹி ஹி ஹிர்.ரொம்ப சுலபம்.. ஏன்னா ராஜ்னு பேர் இருக்கற எல்லோருமே அப்படி தான் :)))))))))

ஹர்ஷினி அம்மா said...

கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க

ராஜ நடராஜன் said...

நல்வாழ்த்துக்கள்.ப்ளாக் பாரஸ்ட் கேக் கிளாசிக்கலா அதுவும் பிறந்த நாளுக்கு சரியான கேக்.தயாரிப்பின் கடைசிப் படத்தைப் பார்த்தா நல்லாவே வந்திருக்கிறது.பைப்பிங் கொஞ்சம் அழகு படுத்தினா அக்கம் பக்கத்துல ஆர்டர் பிடிச்சிடலாம்:)

ஹர்ஷினி அம்மா said...

ராஜ நடராஜன் நன்றிங்க...ஆமாங்க பைப்பிங் ஏதோ கொஞ்சம் வரும் ஆனா கீரிம் மெல்ட் ஆகா ஆரம்பிச்சுடுச்சு அவரும் வரும் நேரம் ஆயிடுச்சு அதான் கடைசியில் அவசர அவசரமான செய்தேன்...ஆமாம் எப்ப ஆர்டர் தரபோறீங்க? :-)

பிரியமுடன்...வசந்த் said...

தங்களவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Anonymous said...

My wishes to your husband.
Cake looks good and send me my piece.
Sangamithra

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

இதே அன்போடும் அக்கறையோடும் எப்பவும் இருக்க எங்கள் ஆசிகள்.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.

திகழ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Geetha Achal said...

உங்களுடைய கணவருக்கு எங்களுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் (தாமதமாக)...

அம்மா ஊரில் இருந்து வந்து இருப்பதால், நெட் பக்கமே வரமுடியவில்லை...

பிளாக் பராஸ்ட் கேக் சூப்ப்பர்ப்...நான் கூட நினைப்பது உண்டு...இது செய்வது கஷ்டம் ...நீங்கள் சுலபமாக செய்வதை சொல்லி கொடுத்து இருக்கின்றிங்க...

என்னவர் பிறந்தநாளும் அடுத்த மாதம் வரவிருக்கின்றது...உங்கள் செய்முறைபடி செய்து பார்க்கின்றேன்..

எனக்கு இந்த கேக் மிகவும் பிடிக்கும்.

ஹர்ஷினி அம்மா said...

வாழ்த்தியத்துக்கும் நன்றி வசந்த்

Sangamithra உங்களுக்கு இல்லாததா...எடுத்துக்குங்க...எல்லா கேக்கும் அன்னைக்கே காலி.


துளசி கோபால் வாழ்த்துக்கும், ஆசிக்கும் ரொம்ப நன்றிங்க :-)

நன்றி திகழ் :-)

நன்றி கீதா...ஓஒ அப்படியா கீதா அம்மா நல்லா இருக்காங்களா?.. எப்பவுமே அவரோட பர்த்டேக்கு கடையில் வாங்கினாலும் நானும் தனியா ஒரு கேக் செய்துவிடுவேன்...நான் முதல் முறையா இதை ட்ரை செய்தேன் ரொம்ப சுவையா இருக்குன்னு அவரும் விரும்பி சாப்பிட்டார் எனக்கும் சந்தோசம். :-)

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்