Sunday, October 4, 2009

வெஜ் ஸ்பிரிங் ரோல்



வெஜ் ஸ்பிரிங் ரோல்

சைனிஸ் ஸ்பிரிங் ரோல் நாம் வீட்லேயே எளிய முறையில் செய்யலாம்...குழந்தைகளுக்கா செய்ததால் காய்களை வனக்கினேன்... பெரியவர்களுக்கு எனில் அப்படியே கூட செய்யலாம்...நாமே வீட்டில் பேஸ்ட்ரி(Sheets)ம் தயாரிக்கலாம் ஆனால் கடையில் கிடைக்கும் இதை உபயோகித்தால் அதே போல இருக்கும்...வாங்க படங்களுடன் எளிய செய்முறையை பாக்கலாம்.

தேவையான பொடுட்கள்:-

முட்டை கோஸ்- 1/2 கப்
கேர‌ட்- 1/2 கப்
பட்டாணி - 1/2கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1 tsp
உப்பு, மிளகுதூள் தேவைக்கு
எண்ணெய்
ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரி(Sheets)
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்




செ‌ய்முறை:-

#.ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கவும்.





#.பின் காய்களை எல்லாம் போட்டு வதக்கவும்.தேவைக்கு எற்ப உப்பு , மிளகுதூள் சேர்க்கவும்.




#.ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரி(Sheets) பிரிஜ்ஜில் இருந்து எடுத்தவுடன் ஒரு ஈரபடுத்திய டிஸ்யு பேப்பரை அதன் மேல் விரிக்கவும்...இல்லை எனில் உலர்ந்து விரும்.




#.மைதா மாவை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.ஒரு ஷீட்டை மட்டும் தனியே எடுக்கவும்.




#.காய்கறிகலவை நன்கு ஆறியபின் பேஸ்ட்ரி ஷீடில் ஒரு டேபிள் ஸ்பூன் காய் கலவையை வைத்து ஸ்பிரிங் ரோல் மாதிரி சுற்றவும்.




#. அதன் முனையை மைதா பேஸ்டில் ஒட்டவும்.




#.பிறகு கடாயில் எண்ணெய் வைத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுக்கவும்.




#. வெஜ் ஸ்பிரிங் ரோல் தயா‌ர்.கெச்சபுடன் பறிமாறவும்.






................................................

7 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

பிரியமுடன்...வசந்த் said...

நானும் நிறையவாட்டி இந்த ஸ்பிரிங் ரோல் சிட்டி செண்ட்ர்ல பாத்துட்டு எப்பிடி சமைக்கணும்ன்னு தெரியாததால விட்டுட்டு வந்துருக்கேன் இனி சமைச்சு பாத்துடுவேன்

Jaleela said...

ஹர்ஷினி ஸ்ப்ரிங் ரோல்ரொம்ப அருமை, நானும் ஹோம் மேட் ஸ்பிரிங் ரோல் செய்து இன்னும் போட நேரமில்லாமல் போடவில்லை.

Mrs.Menagasathia said...

விளக்கம்+படங்கள் கலக்கல்!!

Ammu Madhu said...

ஹர்ஷினி அம்மா இனிக்கி தான் ஓர் தாய் உணவகத்தில் வெஜ் ஸ்பிரிங்க் ரோல் சாப்பிட்டேன்..இதை இப்படி செய்கிறார்கள் என்று தெரிந்தால் நல்லா இருக்கும் னு நினைச்சுட்டு இருந்தேன்..சூப்பரா பதிவு போடுறீங்க..அப்டியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு..


அன்புடன்,

அம்மு.

ஹர்ஷினி அம்மா said...

#.பிரியமுடன்...வசந்த் முயற்ச்சி செய்து பாருங்க ...நன்றி் :-)

#.அப்படியா ஜலீலா அக்கா...நானும் நிரைய போட்டோஸ் வைச்சுட்டு போட நேரம் கிடைக்காமே அப்புரம் அதை மறந்தே போயிடுவேன்.:-)

#.நன்றி மேனகா :-)

#.நன்றி அம்மு.. ஹர்ஷினிய்யும் சைனிஸ், தாய் எல்லாம் சாப்பிட போனால் இதை மட்டும் தான் சாப்பிடுவா...ஒரு தடவை ட்ரை செய்து பாருங்க அப்புறம் வெளியே சாப்பிடவே மாட்டீங்க.:-)

susri said...

nalla irukku entha brand pastry sheet

susri said...

ithu en bolgs http://susricreations.blogspot.com

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்