முட்டை பப்ஸ்
தேவையான பொருட்கள்:
பேஸ்ட்ரி ஷீட் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
வெங்காயம்-1
தக்காளி-2
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
முட்டை- 6
உப்பு
எஃக்வாஸ்(ஒரு முட்டையை உடைத்து கப்பில் உற்றி 1ஸ்பூன் தண்ணீர் கலந்து வைக்கவும்)
செய்முறை:-
@.பேஸ்ட்ரி ஷீட்-ஐ 45 நிமிடங்கள் முன்பு ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்
@.முட்டையை வேக வைத்து உரித்து இரண்டாக வெட்டி வைக்கவும்.
@.கடாயில் எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
@.வெங்காயம் சற்றே வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
@.பின்னர் பொடியாக வெட்டிய தக்காளி போட்டு மசாலாபொடி,உப்பு சேர்த்து வதக்கவும்.
@பேஸ்ட்ரி ஷீட்டை, உலர்ந்த மாவு தூவி சப்பாத்திக் கட்டையால் லேசாகத் தேய்த்து விரும்பும் வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்.
@.ஒவ்வொரு சதுரத்திலும் கொஞ்சம் மசாலாவை வைக்கவும்
@.மசாலா மேல் பாதி முட்டையை வைக்கவும்.
@.மாவின் ஓர பகுதிகளுக்கு எஃக்வாஸ் செய்து ஒரு முள் கரண்டியால் லேசாக அழுத்தவும்.
@. பேக்கிங் தட்டில் அடுக்கி பப்ஸ் மேல் எஃக்வாஸ் குடுக்கவும்.
@. 375 டிகிரி ஃபாரன்ஹீட் ப்ரீஹீட் செய்த அவன் -ல் வைத்து 20 நிமிடங்கள் வைக்கவும்.
@.20 நிமிடங்களில் சுவையான பப்ஸ் தயார்.
குறிப்பு:-
இதே போல காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம், சிக்கன் பப்ஸ் என நம் இஸ்டத்து விதவிதமா செய்யலாம்...செய்வதும் ரொம்ப எளிது.
.........................................







6 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:
சூப்பர் ஹர்ஷினி!!செய்து பார்க்க போறேன்..
ம்ம்ம் பாருங்க பாருங்க அப்புறம் அடிக்கடி வித விதமா பப்ஸ்தான் உங்க வீட்லே :-)
மேனகா மெயில் பாத்தீங்களா? :-)
ஹர்ஷினி கலக்கிட்டீங்க போங்க ரொம்ப சூப்பர்,நானும் வாங்கி வைத்துள்ளேன் சிக்கன் பப்ஸ் செய்வதற்கு,
இன்னும் நீங்கள் அழைத்ததற்கு பதில் போடல,,டைம் கிடைக்கும் போது போடுகிறேன்.
ஜலீலா
எனக்கு தெரிந்து எல்லா பிளாக்கை விட உங்கள் பிளாக் தான் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு
ரொம்ப நன்றி ஜலீலா அக்கா...நான் முதலிலே சமையல் இல்லாமல் கலை சம்பந்தமான பதிவுகள் மட்டும் தான் போட வேண்டுன்னு நினைத்தேன் ஆனால் இப்போ சமையல் தான் அதிகமா இருக்கு அதுக்கு காரணம் உங்க ரெசிபி எல்லாம் பாத்துதான்.:-)
ஹர்ஷினி பப்ஸை பார்க்கும் பொழுதே நாவில் நீர் ஊருகிறது
Faiza எடுத்து சாப்புடுங்கப்பா உங்களுக்குதான் முதல்லே....!!!:-)
Post a Comment