Thursday, July 16, 2009

ப்ரெட் சாண்விச்




தேவையான பொருட்கள்:-

வெங்காயம்- 2
தக்காளி- 2
உருளைகிழங்கு-1 (வேகவைத்து மசித்தது)
பட்டாணி - 1/2 கப்(புரோசன்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்தூள் - 1/2 tsp
கரம்மசாலா தூள்- 1/2 tsp
உப்பு

பிரட் துண்டுகள்
எண்ணெய்

செய்முறை:-


@. ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெட்டிய வெங்காயம் போட்டு வதக்கவும்.




@. வெங்காயம் பாதி வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.




@. அதனுடன் தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்தூள்,கரம்மசாலா தூள் போட்டு வதக்கவும்.




@. பின் வேகவைத்து மசித்த உருளை கிழங்கை போட்டு பிரட்டவும்.



@. அத்துடன் புரோசன் பட்டாணியை சேர்த்து எல்லாம் ஒன்ரு சேர பிரட்டி அடுப்பை அணைத்துவிடவும்.




@. பிரட் உள்ளே வைக்கும் மசாலா தயார்.




@. 4 பிரட் துண்டுகளுக்கு எண்ணெய் அல்லது வெண்ணெய் பூசி வைக்கவும்.



@. இரண்டு பிரட்டின் மேல் மசாலாவை வைக்கவும்.




@. மீதி இரண்டி துண்டுகளை அதன் மேல் வைத்து சான்விச் மேக்கரில் வைக்கவும்.




@. கொஞ்சம் பென்னிறத்துக்கு நிறத்திற்கு மாறியதும் உடனேயே ப்ரெட்டை வெளியில் எடுத்து விடவும். அழகாக வெட்டப்பட்டிருக்கும் அல்லது அந்த அடையாளத்தின் மேலே மெதுவாக கத்தியால் வெட்டிவிடவும்




@. சுவையான ப்ரெட் சாவிச் தயார்.




குறிப்பு:-

@.மசாலாவை முன்னே தயாரித்துவிட்டால் சாண்விச் இரண்டே நிமிடத்தில் தயார் செய்து விடலாம்.

@.ப்ரெட்டின் மேல் எண்ணெய் விட வெண்ணெய் பூசினால் நல்ல மெரு மெரு வென்ரு இருக்கும்





.........

7 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

கீதா ஆச்சல் said...

சூப்பரோ சூப்பர்....எனக்கு பிடித்த சாண்விட்ச்....படங்கள் அழகு

selvakumar said...

very good explanation...
very nice...

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி கீதா....படங்கள் எடுத்து ஒரு மாதம் ஆகுது கீதா ரொம்ப சூடா இருந்தது இப்ப தான் ஆருச்சு ...:-)

ஹர்ஷினி அம்மா - said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி selvakumar.

Mrs.Faizakader said...

ஹர்ஷினி உங்களை 32 கேள்விகள் தொடர்ப்பதிவுக்கு அழைச்சிருக்கேன். நேரமிருக்கும்போது பதிலளியுங்கள்.

Mrs.Faizakader said...

http://eniniyaillam.blogspot.com/2009/07/32.html
32 கேள்விகள் - தொடர்ப்பதிவு

Mrs.Menagasathia said...

ஹர்ஷினி உங்களுக்கு விருது குடுத்திருக்கேன்பா,ஏத்துக்குங்க.
http://sashiga.blogspot.com/2009/07/blog-post_19.html

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்