Wednesday, July 8, 2009

கருப்பு கம்மல்

கருப்பு கம்மல்



போன வாரம் என் தோழிகளுக்கு jewelry Making சொல்லி கொடுத்தேன்...எல்லாருக்கும் ரொம்ப பிடித்து விட்டது இப்போ ஒரு வாரத்தில் 30 க்கும் மேல் தோடு வகைகளை செய்து வைத்து உள்ளார்கள்... அதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது...செய்வதும் ரொம்ப எளிது தான் இதோ அன்று செய்த ஒரு மாடல் தோடு .

தேவையானப் பொருட்கள் :-

#.மணிகள் (பெரிய, சிறிய அளவுகளில்)
#.தோடு செய்யும் குண்டூசிகள்
#.குரடுகள்-இரண்டு வகையான குரடுகள் தேவை.
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
#.அலங்கார மாடல்(ரெடிமேடாக கடைகளில் பல வடிவங்களில் கிடைக்கும்)

செய்முறை:-

#. ஒரு நீளமான ஊசியில் ஒரு பெரிய கருப்புமணி கோர்க்கவும்.


#.சில மணிகள் பெரிதாக இருந்தால் கம்பியில் இருந்து வெளியே வந்துவிடும் அப்படியானால் ஒரு சிறிய கோல்டன் மணியே இணைத்தால் சரியாகிவிடும்..பார்க்கவும் நன்றாக இருக்கும்.



#.பிறகு ஊசியை தேவையான அளவு வளைத்து கொண்டு மீதியை வெட்டி விடவும் மணிகளுக்கு நெருக்கமாக வளைத்து விடவும்.



#.அதன் பின் ஒவ்வொரு அடுக்கிக்கும் ஒவ்வொரு மணிகளாக அதிகரிக்கவும்.



#.அதன் பின் பட்டையில் மாடலில் மாட்டிவிடவும்


#.பின் காதில் மாட்டும் கொக்கியில் மாட்டிவிடவும்.



#.அழகான தோடு தயார்.



.....................

8 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

கீதா ஆச்சல் said...

மிகவும் அழகாக செய்து இருக்கின்றிங்க...எனக்கும் ஒரு கம்மல் செய்து கொடுங்கள்...
எவ்வளவு பொருமையாக செய்து இருக்கின்றிங்க..
எனக்கு இது மாதிரி கம்மல் மிகவும் பிடிக்கும்...

ஹர்ஷினி அம்மா - said...

கீதா என்ன வேனும்னு சொல்லுங்க அனுப்பு வைக்குரேன்...இது செய்வது ரொம்ப எளிது... என் தோழிகள் ரொம்ப பன்ன ஆரம்பிச்சுட்டாங்க இப்போ!!!...நாளைக்கு உங்க ஊருக்குதான் வரேன் ஒரு வாரம் இருப்பேன்.:-)

Jaleela said...

ஹர்ஷினி அம்மா சூப்பர் கம்மல் அதுவும் கருப்பு கலர் எல்லாத்துக்கும் மேட்ச் ஆகும், என்ன செய்ய இப்ப்போதைக்கு இதில் எல்லாம் இழ்டம் இல்லை..

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி ஜலீலா அக்கா....ஆமாம் அக்கா கருப்பு எல்லாத்துக்கும் பொருந்தும்.

Ammu Madhu said...

எவ்வளவு அழகா பண்ணிருக்கீங்க!!!எங்க அம்மாவும் இப்டி தான் நறைய தோடு,நெக்லஸ் எல்லாம் பண்ணிகிட்டே இருப்பாங்க..எனக்கு இந்த விதமான தோடுலாம் ரொம்ப புடிக்கும்..அம்மா கூட இருந்தப்போ கத்துக்கர்துலலாம் இண்டரஸ்ட் இல்லை ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் கத்துக்கணும்னு ரொம்ப ரொம்ப ஆசை வந்துருச்சு ..

நீங்கள் எனது ப்ளாக்கில் கருத்து தெரிவித்திருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி..அடிக்கடி ப்ளாக் பக்கம் வந்து எனோட ரெசிபியும் ட்ரை பண்ணி பாருங்கோ:)
(அன்பு கட்டளைதான்..தவறாக நினைக்க வேணாம்..)

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க ப்லாக்ல நெறைய கத்துக்கற விஷயமிருக்குங்க.

இன்னைக்குத்தான் பார்த்தேன்
எனக்கு இதில் ஆர்வம் அதிகம்
எதையாவது செய்யனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன், கடவுளா பார்த்து நீங்க விருது கொடுத்து இந்தப் பக்கம் கைய காண்பிச்சு இருக்கா மாதிரி இருக்குங்க.

Oviyaツ said...

super!!

ஹர்ஷினி அம்மா said...

Thanks oviya .

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்