Monday, July 6, 2009

ஈசி முறுக்கு



முருக்கு நம் பலகாரத்தில் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... ஆனால் இந்த முருக்கு பன்ன அரிசி ஆட்டி, பொட்டுகடலையை பொடித்து முருக்கு பன்னுவதை பார்த்தாலே ஏதோ இது பெரிய வேலை போல என நினைத்தேன்..ஆனால் என் தோழி லதா செய்யும் முறையில் பன்னினால் முருக்கு உடனே தயார் 1 கப் அரிசி மாவு போட்டால் 10 நிமிடத்தில் முருக்கு அழகாக தட்டில் இருக்கும் :-)

தேவையான பொருட்கள்:-

அரிசிமாவு - 4 கப்
கடலைமாவு - 1 கப்
வெண்ணெய் - 1tsp
எள் - 1 tsp
எண்ணெய்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:-

*.அரிசிமாவு, கடலைமாவு,உப்பு, வெண்ணெய், எள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டுக் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.



*.வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கையில் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு முறுக்கு குழலில் 3 துவாரமுள்ள அச்சைப் போட்டு மாவைக் குழலினுள் வைத்து எண்ணெயில் வட்டங்களாகப் பிழியவும்.



*.இரு பக்கங்களும் நன்றாக வெந்து சத்தம் நின்றதும் கம்பியால் எடுக்கவும்.

*.சுவையான முருக்கு நொடியில் தயார்.



....................

8 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

கீதா ஆச்சல் said...

முருக்கு செய்முறை மிகவும் ஈஸியாக இருகின்றது...அதிலும் கடலைமாவு சேர்த்து புதுவிதமாக இருக்கு...

ஆஆ...முருக்கு ஆசையை எற்படுத்துவிட்டிங்க...எல்லா பொருட்களும் வீட்டில் இருக்கின்றது...அக்ஷ்தா குட்டிக்கு செய்து கொடுக்கவேண்டியது தான்..

ஹர்ஷினி அம்மா - said...

கீதா இதுலே மிளகாய்தூளும் சேர்ப்பாங்க ஆனா குழந்தைகளுக்கு என்பதால் சேர்க்க வில்லை

அக்ஷ்தா குட்டிக்கு பன்னிகுடுங்க...குட்டிக்கு கண்டிப்ப பிடிக்கும்.

Mrs.Menagasathia said...

கடலை மாவில் முறுக்கு புதுசா இருக்கு ஹர்ஷினி.முறுக்கு பார்க்கும் போதே சாப்பிடத் தோனுதுப்பா.....

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி மேனகா....பார்க்க மட்டும் இல்லைப்பா சாப்பிடவும் சுவையாக இருக்கும் :-)

kavi.s said...

ஹாசினி உங்க முறுக்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்னாடியே செய்து சாப்பிட்டு, காலியும் ஆயிடுச்சு,ஆனா பின்னூட்டம் கொடுக்கறது மட்டும் இப்ப:) ரொம்ப ஈஸியா இருக்கு நன்றி,உங்களுக்கும் உங்க தோழி லதாவிற்கும்.

ஹர்ஷினி அம்மா said...

பில்டர் காபி கவி :-) ...லெட்டானாலிம் உங்க பின்னுட்டத்துக்கு நன்றிபா...கண்டிப்பா சாமுக்கு பிடிச்சு இருக்கும்ன்னு நினைக்குறேன்.!

susri said...

nallaa irukku kadalai maavu vaasam irukkaathaa?
http://susricreations.blogpsot.com

ஹர்ஷினி அம்மா said...

நன்றி susri....இந்த பெயர் எங்கையோ கேட்ட மாதிரி இருக்கே!!!!..

கண்டிப்பா வாசம் அடிக்காது..அதுவும் இல்லாமே எண்ணெயில் நல்லா வெந்துடும்..நல்லா இருக்கும். :-)

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்