Sunday, June 28, 2009

காய்கறி பாஸ்தா



தேவையான பொருட்கள்:-

பாஸ்தா-2 கப்
வெங்காயம் -1
தக்காளி -1
காரட்,பீன்ஸ், பட்டாணி கலவை- 1/2 கப்(வேகவைத்தது)
டின் தக்காளி சாஸ்/puree - 1/2 கப் (அல்லது பாஸ்தா சாஸ்)
பூண்டு -நான்கு பற்கள்
உப்பு - ஒரு தேக்கரண்டி
சில்லி ஃபிளேக்ஸ்-கால் தேக்கரண்டி
துறுவிய பார்மசான் சீஸ் -1/4 கப்
ஆலீவ் ஆயில் -2 tsp

செய்முறை:-

*.வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டை நசுக்கி வைக்கவும்.

*.தக்காளியை பொடியாக நருக்கவும்.

*.ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் 1/2 ஸ்பூன் உப்பு போட்டு அதில் பாஸ்தாவை போட்டு 10 நிமிடம் வேக விடவும்.

*.பாஸ்தா வேகும் நேரத்தில் ஒரு காடாயை காயவைத்து எண்ணெயை ஊற்றவும்.

*.அதில் வெங்காயம் பூண்டைப் போட்டு வதக்கவும்.தொடர்ந்து தக்காளி போட்டு வதக்கவும்.

*.அதில் வேக வைத்த காய்கறிகளை போட்டு வதக்கவும்.

*.பிறகு தக்காளி சாஸ்/puree (அல்லது பாஸ்தா சாஸ்) ஊற்றவும்.

*.நன்கு கொதித்தும் உப்பு,மற்றும் கால்க்கோப்பை பாஸ்தா வேக வைத்த தண்ணீரைச் சேர்க்கவும்.

*.வெந்துக்கொண்டிருக்கும் பாஸ்தாவை ஜல்லடைக் கரண்டியால் அரித்தெடுத்து உடனே சாஸில் கொட்டி கலக்கவும்.

*.குழந்தைகளுக்கு தனியாக எடுத்த பின் சில்லி ஃபிளேக்ஸ் மேலே தூவிக்கொள்ளலாம்.

*.பாஸ்த்தாவை பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸைத் தூவி சூடாக பரிமாறவும்.



........

7 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

கீதா ஆச்சல் said...

மிகவும் கலர்புலாக இருக்கின்றது.குழந்தைகள் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள்.
Hope you would have settled down in new place. Take care.

ஹர்ஷினி அம்மா - said...

ஆமாம் கீதா குழந்தைகளுக்கு பிடிக்கும்... அடுத்த மாதம் தான் போகிறோம் கீதா :-)

Mrs.Menagasathia said...

ஹாய் எப்படி இருக்கிங்க,ஹர்ஷினி குட்டி நலமா
அடுத்த மாதம் வேற ஊருக்கு நல்லபடியாக செட்டிலாக வாழ்த்துக்கள்.நீண்ட நாள் கழித்து குறிப்பு பார்க்கையில் சந்தோஷம்,நன்றாக இருக்கு.நிச்சயம் பிள்ளைகளுக்கு பிடிக்கும்.

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி மேனகா....ஹர்ஷினி நல்லா இருக்காப்பா...அவளுக்கு லீவ் விட்டாச்சு அவகூடவே நேரம் சரியா இருக்குப்பா.

விக்னேஷ்வரி said...

இது மக்ரோனி மாதிரி இருக்கே பார்க்க. பாஸ்தாவும் இந்த முறையில் செஞ்சா நல்லா தான் இருக்கும். நல்லாருக்கு ஹர்ஷினி அம்மா.

ஹர்ஷினி அம்மா - said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விக்னேஷ்வரி :-)

இது பாஸ்தா தான் பல வடிவங்கலில் கிடைக்கிறதே.

ஹர்ஷினி அம்மா - said...
This comment has been removed by the author.

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்