Monday, May 25, 2009

பிரட் புட்டிங்




தேவையானப் பொருட்கள்

பிரட் - 1
பால் - 2 கப்
முட்டை - 6
சர்க்கரை - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1 tsp
திராட்சை - சிறிது
பிரவுன் சுகர் - 2 தேக்கரண்டி




செய்முறை:-

@.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனை நன்கு அடித்துக்கொள்ளவும். அத்துடன் பால், எசன்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி கஸ்டட் ஆக்கவும்.

@.பிரட்டை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.




@.வெட்டிய பிரட்டை ஒரு பேக்கிங் பாத்திரத்தில் போட்டு, அதில் முட்டை கலவையை (கஸ்டட்)ஊற்ற வேண்டும்.




@.1/2 மணி நேரம் பிரிஞ்ஜில் வைக்கவும்.... பிரட் கஸ்டடில் நன்றாக ஊறிக்கொள்ளும்

@.பின் அதன் மேல் திராட்சைகளை தூவவும். அத்துடன் பிரவுன் சுகரினையும் மேலே தூவி ஓவனில் வைத்து 350 டிகிரி Fல் சுமார் 45 நிமிடங்கள் பேக் செய்யவும்.





@.பேக் ஆனதும் புட்டிங் நன்றாக பொங்கி வந்து இருக்கும்.



@.இதை சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.



***** .

3 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Faiza said...

hi.. can i make it in a pressure cooker?

ஹர்ஷினி அம்மா said...

Faiza குக்கரில் செய்தால் மேலே பிரவுன் நிறத்தில் வராது...வேனும்னா குக்கரில் மணல் போட்டு செய்யலாம்.

Faiza said...

thanks Harshini Amma!

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்