Thursday, February 5, 2009

ஈஸி கேசரி


ஈஸி கேசரி

தேவையானப்பொருட்கள்:

ரவா - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 4 tsp
முந்திரிப்ப‌ருப்பு - 10
திராட்சை - 10
ஏல‌க்காய் பொடி - 1/4 tsp
கேச‌ரி க‌ல‌ர் -சிறிது

செய்முறை:

@.ஒரு வாண‌லியில் 1 tsp நெய்யை விட்டு, அதில் ர‌வாவைப் போட்டு வாச‌னை வ‌ரும் வ‌ரை வ‌றுத்து எடுத்து த‌னியாக‌ வைத்துக் கொள்ள‌வும்.

@.அதே வாண‌லியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகிய‌வற்றை‌யும் வ‌றுத்து எடுத்து வைத்துக் கொள்ள‌வும்.

@.அடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும் அதில் கேசரி கலர் கலந்துவிடவும்

@.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும்

@.ரவா எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்

@.நன்றாகக் கிளறிய பின் நெய் சேர்த்து மீண்டும் கிளறவும்.

@.கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

@.சுவையான கேசரி தாயார்.

4 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

குடும்பம் said...

ஹாய் சூப்பரா இருக்கு.பார்க்கும் போதே சாப்பிடனும்னு தோனுது.

மலர் said...

வாங்க வாங்க சாப்பிட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க... :-)

observer said...

வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

mrs.kader said...

ஹாய் மலர் ஈசி கேசரி பார்க்கும் பொழுதே நாவில் நீர் ஊறுகிறது

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்