Thursday, January 15, 2009

புத்தம் புது பூமி வேண்டும்,

புத்தம் புது பூமி வேண்டும்,
நித்தம் ஒரு வானம் வேண்டும்,
தங்க மழை பெய்ய வேண்டும்,
தமிழில் குயில் பாட வேண்டும்.

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்,
நெற்றி வேர்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்,

வண்ண வின்மீன்கள் வேண்டும்,
மலர்கள் வாய் பேச வேண்டும்,
வண்டு உட்காரும் மலர் மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்,

கடவுளே கொஞ்சம் வழிவிடு
உன் அருகிலே ஓர் இடங்கொடு
புன்னகை எங்கள் தாய் மொழி என்று வரங்கொடு
பூமியில் சில மாறுதல் தனை வரவிடு.(புத்தம்)

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்,
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலைக் கொள்ளும் வரம் வேண்டும்,

பஞ்சம் பசி போக்க வேண்டும்,
பாலைவனம் பூக்க வேண்டும்,
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்,

போனவை அது போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்,
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்,
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்.(புத்தம்...

1 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

TamilBloggersUnit said...

புத்தம் புது பூமி வேண்டும்...

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்